பிறப்பின்போதே
நிச்சயிக்கப்பட்ட
நிதர்சனம்..
பந்தமோ
பாசமோ
பழக்கமோ
உறவுகள்
எதுவாயினும்
உடன் இருக்கும்
காலங்கள் சிறிது..
நினைவுகள் நிறைய..
விதியோ
தற்செயலோ
விலக்கு
இல்லை எவர்க்கும்..
அறிவு அதனை
அறிந்திடினும்
மனம் மட்டும்
மறுப்பது ஏனோ..!!

Post a Comment

Previous Post Next Post