"அம்மா..நம்ம வீட்டு முன்னாடி காக்கா கத்துது,அப்போனா இன்னைக்கி நம்ம வீட்டுக்கு சொந்தகாரங்க வரப்போராங்க..ஐய்யா ஜாலி.." என்று
நம் குழந்தை பருவத்தில் சொல்லி மகிழ்ந்த இந்த வாக்கியத்திற்கு பின் 5000 வருட வரலாறு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..??
முற்காலத்தில் கடலில் பயணம் செய்பவர்கள் தங்களுடன் சில காகங்களை கூண்டினில் அடைத்து எடுத்து செல்வார்கள்.கரைக்கு செல்ல வழி அறியாத சில சமயங்களில் இந்த காகங்களை பறக்க விடுவார்கள்.அந்த காகங்கள் கரை இருக்கும் திசையை அறிந்து பறந்து செல்லும்.அந்த காகங்களை கடற்பயணம் மேற்கொண்டவர்கள் பின்தொடர்வர்.பறந்து சென்ற காகங்கள் கரையை அடைந்து கரையும்.
காகங்கள் கரையும் ஒலியை கேட்டு கரையோரத்தில் வாழும் மக்கள் இந்த காகங்களை பின்தொடர்ந்து கப்பலில் மனிதர்கள் வரப்போகிறார்கள் என அறிந்து கொண்டு அவர்கள் முன் பின் தெரியதா மனிதர்களாளியினும் அவர்களுக்கான
உணவினை தயார் செய்யத் தொடங்குவர்.இவ்வாறு "காகம் கரைந்தால் விருந்தினர் வருவர்" என்று நம்மப்பட்ட வழக்கம்தான் காலப்போக்கில் "காகம் கரைந்தால் வீட்டிற்கு உறவினர் வருவர்" என்ற வாக்கியமாக மாறி இன்றளவும் புழக்கத்தில் உள்ளது.
இலக்கியச் சான்று:
சங்க இலக்கியமான குறுந்தொகையில் 210-ஆம் பாடலில்
"விருந்து வரக் கரைந்த காக்கை" என்ற வரி இடம்பெற்றுள்ளது. இப்பாடலின் ஆசிரியர் நச்செள்ளையார் ஆவார்.காக்கையை பற்றி பாடியதால் "காக்கை பாடினியார் நச்செள்ளையார்" என அழைக்கப்படுகிறார்.
வரலாற்று சான்று:
உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்று மெசொப்பொத்தேமியா நாகரிகம்.இது இன்றைய ஈராக், சிரியா மற்றும் வடமேற்கு ஈரான், துருக்கியின் தென்கிழக்குப் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது.இந்த மெசொப்பொத்தேமியா நாகரிகத்தின் நாணயம் மற்றும் ஓவியங்களில் ஒரு கடல் மாலுமி காக்கையை பறக்க விடுவது போன்று பொறிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த முறையை தமிழர்கள் மட்டுமின்றி கடலில் பயணம் செய்த பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மனிதர்களும் பின்பற்றியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.இது போன்ற வாக்கியங்களை மூடநம்பிக்கை என்று ஒதுக்காமல் அதன் உண்மையான பொருளையும் வரலாறையும் அறிய முற்படுவதே சிறப்பு.
நன்றி..
Post a Comment