காணாமல் சென்று  கரைகிறது..கவலை


இனம் புரியா இன்பத்தில் மிதக்கிறது..மனது

மார்கழி மாத குளிரினை உணர்கிறது..உடல்

இயந்திரமாய் இயங்க தொடங்குகிறது..இதயம்

இமைக்க மறக்கின்றன..இமைகள்

சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கண்டுகொள்ளாமல் உன்னை மட்டுமே காண்கின்றன.. கண்கள்

வார்த்தைகளால் விளக்க முடியாத இன்னும் எண்ணிலடங்கா நிகழ்வுகள் 
என்னுள் நிகழ்வதை உணர்கிறேன்..

என்னவளின் விழிகள் என் மீது விழும் அந்த ஒரு சில வினாடிகளுக்கு...

Post a Comment

Previous Post Next Post