பள்ளியின் மூலம்
வந்த பந்தம் அவள்...!!
என் இரத்தத்தில் சேராத
சொந்தம் அவள்....!!
துன்பத்தில் எனக்கு
துனையாய் நிற்பவள்...!!
தோல்வியில் துவலுகையில் ஆறுதல் வார்த்தைகளால் தேற்றுபவள்...!!
கஷ்டங்களில் கண்ணீரை
துடைத்திடும் கைக்குட்டை அவள்...!!
குறும்புகள் செய்திடும்
குட்டி ராட்சசி அவள்...!!
அன்பினால் எனை ஆட்சி செய்திடும்
அழகிய அரக்கி அவள்...!!
கெஞ்சுகையில் மழலை அவள்...!!
சமாதானம் செய்வதற்காகவே
சண்டையிடத் தோன்றும் அவளிடம்...!!
அன்பு காட்டுவதில்
என் அன்னைக்கு அடுத்தவள்...!!
அக்கறை கொள்வதில்
என் அக்காளுக்கு அடுத்தவள்...!!
என் உடன் பிறவா உறவு அவள்...!!
மற்றவரிடத்தில் மறைக்கப்படுபவை எல்லாம் அவளிடத்தில் மட்டும் ஒப்பிக்கப்படும்...!!
வள்ளுவரின் அதிகாரங்களுள் ஒன்றின் அகராதி அவள்...!!
அறிவுரை வழங்குவதில்
ஆசிரியை அவள்...!!
கோவித்து கொள்கையில்
கொள்ளை அழகு அவள்...!!
செல்லமாய் திட்டுவதில்
பட்டம் பெற்றவள்...!!
என் வெற்றியை நினைத்து
பெருமிதம் கொள்பவள்...!!
மொத்தத்தில் நட்பின்
நாயகியே அவள்தான்....!!
இதற்கு மேல் உனை வர்ணிக்க
வரிகள் இன்றி வாயடைத்து நிற்கும்
என்னை மன்னித்து விடு...
ஆண் பெண் நட்பினை
ஏளனம் பேசும் சிலருக்கு
எடுத்துரைப்பது கடினம்...
பாலினம் பார்க்காமல் பழகும் நம்மை தவறாக பார்ப்பவர்கள் மீது பரிதாபம் கொள்ளட்டும் நம் நட்பு...!!!!
************
Post a Comment